தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

குற்றங்களைத் தடுக்க விழிப்புணர்வு பிரசாரம்

குற்றங்களைத் தடுக்க காவல் துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் தெரிவித்தார்.

News image
Updated On :9 நவம்பர் 2017, 2:57 am

DIN

குற்றங்களைத் தடுக்க காவல் துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் தெரிவித்தார்.
திட்டக்குடியை அடுத்த ராமநத்தம் காவல் நிலையப் பகுதிகளில் அடிக்கடி தங்கச் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதைத் தடுக்க சோதனைச் சாவடிகள் அமைப்பு, தனிப் படை அமைப்பு ஆகியவற்றில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் கவனம் செலுத்தி வருகிறார்.
அதன்படி, திட்டக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆர்.பாண்டியன் வழிகாட்டுதலின் பேரில், ராமநத்தம் காவல் நிலைய ஆய்வாளர் சுதாகர் தலைமையில், அனைத்து கிராமங்களிலும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, கிராமங்களில் இளைஞர்கள் கொண்ட குழுவை அமைத்து, கண்காணிப்புப் பணியில் ஈடுபட வலியுறுத்தப்பட்டது. மேலும், சந்தேகப்படும் நபர்கள், வெளிமாநிலத்தினர் யாராவது தென்பட்டால் காவல் நிலையத்துக்குத் தகவல் தர வேண்டும்.
இரவு நேரங்களில் கதவைப் பூட்டி வைத்து உறங்குவதோடு, யாரேனும் கதவைத் தட்டினால் அவர் யார் என்பதை உறுதி செய்துகொண்ட பின்னரே கதவைத் திறக்க வேண்டும். சந்தேகம் ஏற்பட்டால் காவல் துறைக்கு தொலைபேசி மூலம் தகவல் தரவேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட அனைத்து கிராமங்களிலும் காவல் துறையைத் தொடர்பு கொள்ள ஏதுவாக, தொலைபேசி எண்கள் குறித்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.