ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

பண மதிப்பிழப்பு நடவடிக்கையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எடுத்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையைக் கண்டித்து, இடதுசாரி அமைப்பினர் கடலூரில் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :9 நவம்பர் 2017, 2:53 am

DIN

மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எடுத்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையைக் கண்டித்து, இடதுசாரி அமைப்பினர் கடலூரில் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கருப்புப் பணத்தை ஒழிக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பதாக அறிவித்த  மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் 8 -ஆம் தேதி உயர்மதிப்புக் கொண்ட ரூ. 500, 1,000 நோட்டுகளைச் செல்லாது என்று அறிவித்தது.
 இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, மக்கள் தங்களிடமிருந்த ரூபாய் தாள்களை மாற்றுவதற்காக வங்கிகளில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆனால், இந்த நடவடிக்கையால் கருப்புப் பணம் ஒழியவில்லை என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும், இடதுசாரி அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மத்திய பாஜக அரசின் இந்த அறிவிப்பு, இந்தியப் பொருளாதாரத்தின் மீதும், இந்திய மக்களின் வாழ்வாதாரத்தின் மீதும் தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தும் என்று இடதுசாரி அமைப்புகள் தெரிவித்தன.
அதன்படி, தற்போது கருப்புப் பண மீட்பு, கள்ளப் பணம் தடுப்பு, பயங்கரவாதிகள் பணப்பரிமாற்ற தடை என அரசால் சொல்லப்பட்ட எந்தவொரு நோக்கமும் நிறைவேறவில்லை. கருப்புப் பணம் பதுக்கியிருந்ததாக ஒரு நபர் கூட தண்டிக்கப்படவில்லை. மொத்தப் பணமும் வெள்ளைப் பணமாக மாற்றப்பட்டுள்ளது.
எனவே, மக்களை அவதிக்குள்ளாக்கிய இந்த நடவடிக்கையின் ஓராண்டு தினத்தை நினைவுக்கூரும் வகையிலும், மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் இடதுசாரிகள் அமைப்புகள் சார்பில், கடலூர் திருப்பாதிரிபுலியூரில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் டி.ஆறுமுகம் தலைமை வகித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் டி.மணிவாசகம், சிபிஐ (எம்எல்-லிபரேஷன்) கட்சியின் நிர்வாகி ஜி.தனவேல், சோசியல் யூனிட்டி சென்டர்ஆப் இந்தியா கட்சியின் நிர்வாகி பி.சந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கோ.மாதவன், வி.சுப்புராயன், ஜெ.ராஜேஷ்கண்ணா, ஆர்.அமர்நாத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி வி.குளோப் உள்படப் பலர் பங்கேற்றனர்.
சிதம்பரத்தில்...
பண மதிப்பிழப்பு நடவடிக்கையைக் கண்டித்து கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அதன் மாவட்டத் தலைவர் எம்.என்.விஜயசுந்தரம் தலைமை வகித்தார். அவர் தலைமையில் கண்டன ஊர்வலம் வடக்கு வீதி தலைமைத் தபால் நிலையத்திலிருந்து புறப்பட்டு, காந்தி சிலை அருகே சென்றடைந்தது. தொடர்ந்து, அங்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காங்கிரஸ் கட்சியின் நகரத் தலைவர் எம்.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் எம்.செந்தில்குமார், மாவட்ட நிர்வாகிகள் தவரத்தாம்பட்டு விஸ்வநாதன், ராம.இளங்கோவன், எஸ்.ஆறுமுகம், ஆர்.எஸ்.ஞானம், நகர துணைத் தலைவர் ச.பாலசுப்பிரமணியன், வட்டாரத் தலைவர்கள் ஆர்.புவனேஷ், கே.வி.இளங்கீரன், எம்.தமிழரசன், எஸ்.கந்தசாமி, பூங்கொடி கார்த்திகேயன், டி.கே.எம்.வினோபா, ஆர்.குமாரமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.