என்.எல்.சி. இந்தியா நிறுவனம், என்.எல்.சி. இண்டஸ்ட்ரியல் கூட்டுறவு சொசைட்டி தொழிலாளர்கள் சங்கம், என்.எல்.சி. பொது காண்ட்ராக்ட் தொழிலாளர் ஊழியர்கள் சங்கத்தின் ஆண்டுப் பேரவைக் கூட்டம், நெய்வேலி 24-ஆவது வட்டத்தில் உள்ள சி.ஐ.டி.யு. அலுவலக வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
அந்தச் சங்கத் தலைவர் கே.பி.மாதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். பொதுச் செயலர் ஆர்.சக்கரபாணி பணி அறிக்கையை வாசித்தார். பொருளாளர் எம்.சீனிவாசன் வரவு - செலவு அறிக்கையை சமர்ப்பித்தார். மாவட்டச் செயலர் பி.கருப்பையன் தொடக்க உரை நிகழ்த்தினார். மாநிலக் குழு உறுப்பினர் ஏ.வேல்முருகன், மாவட்டப் பொருளாளர் ஜி.குப்புசாமி, இணைச் செயலர் டி.ஜெயராமன், துணைத் தலைவர் எஸ்.திருஅரசு ஆகியோர் பேரவையை வாழ்த்திப் பேசினர்.
பேரவையில் புதிய நிர்வாகிகள் 20 பேர் கொண்ட குழு தேர்வு செய்யப்பட்டது. அதன்படி, சிறப்புத் தலைவராக ஜி.சுகுமாறன், சிறப்புச் செயலராக பி.கருப்பையன், தலைவராக ஆர்.சக்கரபாணி, பொதுச் செயலராக டி.அமிர்தலிங்கம், பொருளாளராக என்.சண்முகம், துணைத் தலைவர்கள், இணைச் செயலர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில் என்.எல்.சி. இண்டஸ்ட்ரியல் கூட்டுறவு சொசைட்டி தொழிலாளர்கள் சங்கம், என்.எல்.சி. பொது காண்ட்ராக்ட் சங்கம் ஆகிய இரண்டையும் ஒன்றாக இணைத்து, என்.எல்.சி. இண்கோசர்வ், ஹவுசிகோஸ், ஒப்பந்தத் தொழிலாளர் ஊழியர்கள் சங்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச சம்பளம் மற்றும் பஞ்சப்படி வழங்க வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரையும் இண்கோ சொசைட்டியில் இணைக்க வேண்டும். மாதத்துக்கு 26 நாள்கள் பணியை உத்தரவாதப்படுத்த வேண்டும். வீடு, நிலம் வழங்கியவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர். சங்கத்தின் மாநில உதவிப் பொதுச் செயலர் வி.குமார் நிறைவுரையாற்றினார். அலுவலகச் செயலர் டி.அமர்தலிங்கம் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆறுகள் மேம்பாட்டுத் திட்டம்: விவசாயிகளுடன் ஆட்சியா் ஆலோசனை

நாகையில் கவியரசா் கண்ணதாசன் நூற்றாண்டு விழா

மாற்றுத்திறனாளிகளுக்கு சேவையாற்றியவா்கள் முதல்வா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 25 2026) 12 ராசிகளுக்கும்! கும்ப ராசிக்கு எப்படி?
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


