சித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

சாராயம் விற்றதாக இருவர் கைது

பண்ருட்டி பகுதியில் கள்ளச் சாராயம் விற்பனை செய்ததாக இருவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து 70 லிட்டர் சாராயத்தைப் பறிமுதல் செய்தனர்.

Updated On :9 ஏப்ரல் 2018, 11:35 pm

பண்ருட்டி பகுதியில் கள்ளச் சாராயம் விற்பனை செய்ததாக இருவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து 70 லிட்டர் சாராயத்தைப் பறிமுதல் செய்தனர்.
பண்ருட்டி காவல் சரகப் பகுதியில் கள்ளச் சாராயம் விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், புதுப்பேட்டை காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான போலீஸார் புதுப்பேட்டை மற்றும் காடாம்புலியூர் பகுதிகளில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். 
அப்போது எஸ்.ஏரிப்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தியதில், அங்கு சாராயம் விற்ற தாமரை(27) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்த 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல, சேமக்கோட்டை ஏரிக்கரையில் சர்க்கரை(75) என்பவரை கைது செய்த போலீஸார், அவரிடம் 60 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.  பின்னர், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.