6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூட்டம்

நெய்வேலியில் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் , வட்டம் 25-இல் உள்ள விருந்தினர் மாளிகையில் அண்மையில் நடைபெற்றது.

Updated On :9 ஏப்ரல் 2018, 11:50 pm

நெய்வேலியில் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் , வட்டம் 25-இல் உள்ள விருந்தினர் மாளிகையில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்டச் செயலர் ரவி தலைமை வகித்தார். மாவட்டப் பொறுப்பாளர்  இளவரசன் முன்னிலை வகித்தார். நகர, ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் பலர் மன்றத்தின் செயல்பாடு குறித்த கருத்துக்களை தெரிவித்தனர். 
தொடர்ந்து நெய்வேலி நகரியத்துக்கான புதிய நகரச் செயலராக செல்வம், நகர இணைச் செயலராக அருள், துணைச் செயலர்களாக ரஜினிமுருகன், கண்ணதாசன், தாமு, தகவல் தொழில்நுட்பச் செயலராக முகிலன், செயற்குழு உறுப்பினர்களாக கதிரவன், வெங்கட், கார்த்திகேயன், முருகன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முடிவில் நகர இணைச் செயலர் அருள் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.