மெய்யான சமூக நீதி, நிலையான வளர்ச்சி, வேளாண்மை எழுச்சியே நம் இலக்கு: அண்ணாமலைதவெக அரசு இந்த ஆண்டு ரூ. 85 ஆயிரம் கோடி கடன் வாங்கப்போகிறது : அண்ணாமலைவீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கை 50% எட்டிவிட்டோம்: அண்ணாமலை2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நடக்கும்: அண்ணாமலை உறுதிஎதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி
/

உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வுப் பேரணி

உலகத் தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு, சிதம்பரம் ரோட்டரி சங்கம், இந்திய குழந்தைகள் நல மருத்துவர்கள் குழுவின் கடலூர் மாவட்ட அங்கம், சிதம்பரம் இன்னர்வீல் சங்கம் ஆகியவை

Updated On :2 ஆகஸ்ட் 2018, 8:55 am IST

உலகத் தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு, சிதம்பரம் ரோட்டரி சங்கம், இந்திய குழந்தைகள் நல மருத்துவர்கள் குழுவின் கடலூர் மாவட்ட அங்கம், சிதம்பரம் இன்னர்வீல் சங்கம் ஆகியவை சார்பில், உலகத் தாய்ப்பால் விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை சிதம்பரத்தில் நடைபெற்றது.
 பேரணியில் சிதம்பரம் ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப் பள்ளி சாரணர் படை, இளஞ்செஞ்சிலுவை சங்கம், தேசிய மாணவர் படை ஆகியவற்றை சேர்ந்த சுமார் 120 மாணவர்கள் கலந்து கொண்டு, தாய்ப்பாலின் அவசியத்தை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்திச் சென்றனர்.
 இந்தப் பேரணியை ரோட்டரி சங்கத்தின் துணை ஆளுநர் எஸ்.நடனசபாபதி கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப் பள்ளியின் செயலர் எம்.ஆர். கிருஷ்ணன், தலைமையாசிரியர் கே.செல்வகுமார், இந்திய குழந்தைகள் நல மருத்துவர்கள் குழுவின் தலைவர் ரோட்டேரியன் வி.சிவப்பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத்தின் தலைவர் வி.செல்வநாராயணன், பொருளாளர், ஏ. லட்சுமணன், உறுப்பினர்கள் கே.ஜி.நடராஜன், எஸ்.செந்தில்குமார், எல்.சீனுவாசன், டி.ஜெயராமன், வி.சக்திவேல், வி.அழகப்பன், என்.என்.பாபு, சி.சந்திரசேகரன், ஜி.அனந்தகிருஷ்ணன், எம்.நேசராஜ், இன்னர்வீல் சங்கத்தின் செயலர் கோமதி கோவிந்தராஜ், உறுப்பினர்கள் வரலட்சுமி கேசவன், வேதா சிவப்பிரகாசம், செல்வி முத்துக்குமரன், தாமரை சீனுவாசன் ஆகியோர் பங்கேற்றனர்.
 பேரணிக்கான ஏற்பாடுகளை ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப் பள்ளி உதவித் தலைமையாசிரியர் ஆர்.ரவிசங்கர், சாரண ஆசிரியர் என்.வேலாயுதம், இளஞ்செஞ்சிலுவை சங்க அதிகாரி என்.ரத்தினசபாபதி, தேசிய மாணவர் படை அதிகாரி ஜி. திருவரசமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.