சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

கல்வி, வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு தேவை: சங்க மாநாட்டில் தீர்மானம்

மாற்றுத் திறனாளிக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு தேவையென தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின்

Updated On :30 ஜனவரி 2024, 9:56 pm IST

மாற்றுத் திறனாளிக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு தேவையென தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 இந்தச் சங்கத்தின் கடலூர் மாவட்ட மாநாடு கடலூரில் அரசு ஊழியர்கள் சங்கக் கட்டடத்தில் மாவட்டத் தலைவர் ஜெ.ராஜா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 மாவட்ட துணைத் தலைவர்கள் வி.வசந்தி, ஏ.திருமூர்த்தி, இணைச் செயலர்கள் எஸ்.ஜீவா, எஸ்.வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் பி.ஜான்சிராணி சிறப்புரையாற்றினார். அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் கோ.மாதவன் வாழ்த்தி பேசினார்.
 மாநாட்டில், மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளுக்கான புதிய சட்ட விதிகளை வெளியிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும், 40 சதவீதம் ஊனமுள்ள அனைவருக்கும் மாத உதவித் தொகை வழங்குதல், ரயில் பயணங்களில் ஏற்படும் சிரமத்தை போக்குதல், 100 நாள் வேலைத் திட்டத்தில் 4 மணி நேரம் வேலை வழங்கி முழு ஊதியம் வழங்குதல், கல்வியில் 5 சதவீதமும், வேலைவாய்ப்பில் 4 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்குதல், பெண் மாற்றுத் திறனாளிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்தல், மாதம் ஒருமுறை மாவட்ட நிர்வாகம் குறைதீர் கூட்டம் நடத்துவதோடு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 மாநாட்டில் சங்கத்தின் மாவட்ட செயலர் ஆர்.ஆளவந்தார், பொருளாளர் ராம.நடேசன், துணைத் தலைவர் வி.கல்யாணசுந்தரம், இணைச் செயலர் பி.முருகையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.