கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே சிறுவன் ஓட்டிச்சென்ற பைக் மோதியதில் விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இதுதொடர்பாக சிறுவன், அவரது பெற்றோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
புவனகிரி அருகே உள்ள தம்பிக்குநல்லான்பட்டினத்தைச் சேர்ந்தவன் த.ஜெயராமன் (65), விவசாயி.
இவர் ஞாயிற்றுக்கிழமை காலை தனது வயலுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது பின்னால் வந்த பைக் ஜெயராமன் மீது மோதியதில் அவர் நிகழ்விடத்திலேயே இறந்தார்.
பைக்கை கீழ்புவனகிரியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரது 17 வயது மகன் ஓட்டிச் சென்றது தெரியவந்தது. அவருடன் மேலும், 2 பேர் பைக்கில் அமர்ந்து சென்றதும் தெரியவந்தது.
இதுதொடர்பாக உயிரிழந்த ஜெயராமனின் மகன் பழனிவேல் புவனகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், கொலைக் குற்றமாகாத மரணம் விளைவிக்கும் குற்றத்துக்கு தண்டனை என்ற பிரிவின் கீழ் அந்தச் சிறுவன் மீதும், சிறுவன் (மைனர்) சட்டத்துக்குப் புறம்பாக வாகனத்தை ஓட்டியதால் அதற்கு பெற்றோர் பொறுப்பு என்பதால் அவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் முதல் முறையாக இந்தப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

