கடலூரில் 4 பெண்களிடம் நகை பறித்த சம்பவம் தொடர்பாக 2 பேரை காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
கடலூர் திருப்பாதிரிபுலியூரைச் சேர்ந்தவர் ஜெ.ஜெகதாம்பாள் (75). கடலூர் வண்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் அகிலபிரியா (33), கம்மியம்பேட்டையைச் சேர்ந்தவர் சங்கீதா (25), திருப்பாதிரிபுலியூர் வெள்ளிமோட்டான் தெருவைச் சேர்ந்தவர் ஜோதி (19). இவர்கள் சனிக்கிழமை அவரவர் பகுதியில் நடந்து சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பெண்களிடம் நகையைப் பறித்துச் சென்றனர். இதில், இருவரிடமிருந்து 5 பவுன் நகை பறிக்கப்பட்டது. 2 பேரது நகைகள் தப்பின.
சம்பவம் குறித்து கடலூர் புதுநகர், திருப்பாதிரிபுலியூர் காவல் நிலையங்களில் தனித் தனியாக விசாரணை நடைபெற்று வந்தது. இதற்கிடையில், தங்கராஜ் நகர் பகுதியில் பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் கண்காணிப்பு கேமரா பதிவாக சமூக வலைத்தளத்தில் வெளியானது.
இதுதொடர்பாக டெல்டா பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தி சென்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த கு.சுரேஷ் (23), சென்னை சுனாமி நகரைச் சேர்ந்த ச.சுரேஷ்குமார் (29) ஆகியோரை கைது செய்தனர். இதுதொடர்பாக மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









