இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

கொலை வழக்கில் விவசாயிக்கு 10 ஆண்டுகள் சிறை

கொலை வழக்கில் விவசாயிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

கொலை வழக்கில் விவசாயிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 
கடலூர் மாவட்டம், சோழதரம் காவல் நிலையத்துக்குள்பட்ட குமாரகுடியைச் சேர்ந்த அன்பழகன் மகன் சஞ்சீவி (31). அதேப் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (63). விவசாயி. இவரது மகள் அதேப் பகுதியைச் சேர்ந்தவரை காதல் திருமணம் செய்தது தொடர்பாக சஞ்சீவி தரப்பினருக்கும் சுப்பிரமணியன் தரப்பினருக்கும் முன்விரோதம் இருந்ததாம். கடந்த 25-3-13 அன்று மோட்டார் சைக்கிளில் சென்ற சஞ்சீவி, அந்தப் பகுதியில் நடந்துச் சென்ற சுப்ரமணியன் மீது மோதியுள்ளார். 
இதையடுத்து அன்று மாலையில் சுப்பிரமணியன், அவரது மகன்கள் ஜோதிபாசு (38), சுதாகர் (33), வெற்றிமணி (28), உறவினர் கொளஞ்சிநாதன் (54) ஆகியோர் சேர்ந்து சஞ்சீவியைத் தாக்கினர். இதில், காயமடைந்த சஞ்சீவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து சோதழதரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
வழக்கின் விசாரணை கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி கோவிந்தராஜன்திலகவதி முன்னிலையில் நடைபெற்றது. வழக்கில் நீதிபதி செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார். 
அதில், சுப்பிரமணியனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.ஆயிரம் அபராதமும் விதித்தார். 
அவரது மகன் ஜோதிபாசுவுக்கு ஓராண்டு தண்டனையும், மற்ற இரண்டு மகன்களான சுதாகர், வெற்றிமணிக்கு தலா 6 மாதங்கள் சிறை தண்டனையும், உறவினர் கொளஞ்சிநாதனுக்கு 6 மாதம் சிறைத் தண்டனையும் விதித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.