எழும்பூா் புறப்படும் முக்கிய விரைவு ரயில்கள் இன்றுமுதல் தாம்பரத்திலிருந்து இயக்கம்கும்மிடிப்பூண்டி-கூடுா் 3,4-ஆவது ரயில் வழித்தடங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்அரசுப் பள்ளி மாணவா்கள் 614 பேருக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கீடுமத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மண்டலக் குழு இன்று கூடுகிறது: நதிநீர்ப் பங்கீடு, பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதம்தமிழகத்தின் கடனை 10 ஆண்டுகளில் அடைக்கும் வழி: சௌமியா அன்புமணி யோசனைஅலுமினிய மின் கம்பிகள் வாங்கியதில் ரூ.1,028 கோடி முறைகேடு: தமிழகம் முழுவதும் 60 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை நில வகை பயன்பாடு மாற்றுவதற்கான என்ஓசி: வேளாண் துறையில் இனிபெற வேண்டியதில்லை
/

விருத்தாசலம் நகரின் பெயரை திருமுதுகுன்றம் என மாற்ற வலியுறுத்தல்

விருத்தாசலம் நகரின் பெயரை பழைய நடைமுறைப்படி திருமுதுகுன்றம் என மாற்றக் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

Updated On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

விருத்தாசலம் நகரின் பெயரை பழைய நடைமுறைப்படி திருமுதுகுன்றம் என மாற்றக் கோரிக்கை விடுக்கப்பட்டது. 
திருமுதுகுன்றம் தமிழ் ஆர்வலர்கள் கூட்டமைப்புக் கூட்டம், திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலை நாதர் கோயிலில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, கார்மாங்குடி எஸ்.வெங்கடேசன் தலைமை வகித்தார். கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட முடிவுகள்: 
தற்போதைய விருத்தாசலம், பழங்காலத்திலிருந்து திருமுதுகுன்றம் என்று அழைக்கப்பட்டு வந்தது. வடமொழியில் வழங்கப்பட்டு வரும் விருத்தாசலம் என்ற பெயரை, பழைய நடைமுறைப்படி திருமுதுகுன்றம் என மீண்டும் தமிழில் மாற்றிட வேண்டும். இதுதொடர்பாக கையெழுத்து இயக்கம் நடத்தி அரசின் கவனத்தை ஈர்ப்பது என முடிவு செய்யப்
பட்டது. 
கூட்டத்தில், கூட்டமைப்பின் தலைவராக கார்மாங்குடி எஸ்.வெங்கடேசன், ஒருங்கிணைப்பாளராக எழுத்தாளர் இரத்தினபுகழேந்தி, துணை ஒருங்கிணைப்பாளர்களாக அய்யாவு, வழக்குரைஞர்கள் தங்க.தனவேல், அருணகிரி, அலெக்சாண்டர், கதிர்காமன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கூட்டத்தில் எழுத்தாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்றனர். முன்னதாக எழுத்தாளர் சுந்தரபாண்டியன் வரவேற்றார்.  வழக்குரைஞர் 
தங்க.தனவேல் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.