இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

ஓய்வூதியர் தின பேரணி

சிதம்பரம் அருகே புவனகிரியில் மத்திய, மாநில அரசு பொதுத் துறை ஓய்வூதியர் கூட்டமைப்பினர் சார்பில் ஓய்வூதியர் தின விழா, பேரணி மற்றும் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

சிதம்பரம் அருகே புவனகிரியில் மத்திய, மாநில அரசு பொதுத் துறை ஓய்வூதியர் கூட்டமைப்பினர் சார்பில் ஓய்வூதியர் தின விழா, பேரணி மற்றும் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் ஆகிய மூன்று வட்டங்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதியர் அமைப்பு சார்பில் இந்த நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக புவனகிரி வெள்ளாற்று பாலம் அருகிலிருந்து பேரணி புறப்பட்டது (படம்). பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியாக விழா மண்டபத்தை அடைந்தனர். 
மாவட்டத் தலைவர் ஜி.பழனி தலைமை வகித்தார். வட்டத் தலைவர் என்.கலியமூர்த்தி, அண்ணாமலைப் பல்கலைக்கழக ஓய்வூதியர் சங்கத் தலைவர் பி.இளங்கோ, புவனகிரி வட்டச் செயலர் சீனு.சிகாமணி, காட்டுமன்னார்கோவில் வட்டச் செயலர் எஸ்.திருஞானசம்பந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
சிதம்பரம் வட்டச் செயலர் கே.என்.பன்னீர்செல்வம் வரவேற்றார். மின்வாரிய ஓய்வூதியர் சங்கம் சார்பில் கே.ஆதிமூலம், பி.கே.சீனுவாசன், இணைச் செயலர் ஏ.வைத்தியலிங்கம், ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்டச் செயலர் டி.கண்ணன், தொலைதொடர்புத் துறை சங்க பொறுப்பாளர் ஹெச்.இஸ்மாயில், மாவட்ட துணைத் தலைவர் டி.மகாலிங்கம், எஸ்.கருணாகரன், திருவாரூர் மாவட்ட பொருளாளர் ஜி.மீனாட்சிசுந்தரம் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். 
மாவட்டச் செயலர் ஆர்.மனோகரன் சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாநில துணைத் தலைவர் ஜி.சுந்தரமூர்த்தி நிறைவு உரையாற்றினார். ஆர்.சண்முகம் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.