தமிழக ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கத்தின் மாதாந்திர சிறப்புக் கூட்டம் கடலூரில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவர் மா.கண்ணன் தலைமை வகித்தார். பொதுச் செயலர் பாபு.சுப்பிரமணியன் சென்ற கூட்ட நடவடிக்கைகளையும், பொருளாளர் ர.திருநாவுக்கரசு சங்க வரவு-செலவுகளையும், மாநில துணைத் தலைவர் ஆர்.ஜேக்கப் சங்கத்தின் மாத இதழுக்கான வரவு-செலவுகளையும் வாசித்து ஒப்புதல் பெற்றனர். மாநில துணைத் தலைவர்கள் த.சண்முகசுந்தரம், ஆர்.ராதாகிருஷ்ணன், உதவி பொதுச் செயலர் எம்.தண்டபாணி, வட்டச் செயலர்கள் ஆர்.திருநாராயணன், ஆ.செயராமன், ஆர்.தன்ராசு, விழுப்புரம் மாவட்ட செயலர் கே.நடராஜன் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். 21 மாத ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்துப் பிரிவினருக்கும் கருணைத் தொகையை ரூ.ஆயிரம் வழங்க வேண்டும். மத்திய அரசைப் போல மாநில அரசும் ஓய்வூதியர்களுக்கு மருத்துவப் படியை ரூ.ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், நிர்வாகிகள்
ஆ.ராமதாசு, ஏ.பேட்ரிக், எஸ்.காந்திமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, செயற்குழு உறுப்பினர் எஸ்.ராமலிங்கம் வரவேற்றார். ஆர்.சரஸ்வதி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!
நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!
ரஜினிகாந்த் 173 படத்தின் பெயர் அதிகாரபூர்வ அறிவிப்பு!

சால்மன் மீனின் வாழ்க்கை சுழற்சியும் வலசை பயணமும்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


