கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம், மாவட்ட ஆட்சியர் (பொ) ஆர்.ராஜகிருபாகரன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 348 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். கூட்டத்தில், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 3 பேருக்கு இந்திரா காந்தி தேசிய மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகையாக மாதந்தோறும் ரூ. ஆயிரம் வழங்குவதற்கான உத்தரவுகள், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு தலா ரூ.5,018 மதிப்பிலான இலவச சலவைப் பெட்டிகளையும் ஆட்சியர் வழங்கினார்.
கூட்டத்தில் தனித் துணை ஆட்சியர் (ச.பா.தி) எஸ்.பரிமளம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ரா.பானுகோபன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ராஜஸ்ரீ, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் வி.சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









