என்எல்சி சுரங்க விரிவாக்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பாட்டாளி மக்கள் கட்சியினர் புதன்கிழமை (டிச.26) போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
கடலூர் கிழக்கு மாவட்ட பாமக செயற்குழு கூட்டம் கடலூரில் மாவட்டச் செயலர் சண்.முத்துக்கிருஷ்ணன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. ஒன்றியச் செயலர்கள் மதி, விஜய், வினோத், ராஜேந்திரன், முரளி, பாரதிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைப் பொதுச் செயலர் பழ.தாமரைக்கண்ணன், மாநில துணைத் தலைவர் ப.சண்முகம், சமூகநீதிப் பேரவைச் செயலர் தமிழரசன், அமைப்பின் துணைச் செயலர் பி.ஆர்.பி.வெங்கடேசன், வன்னியர் சங்க துணைத் தலைவர் பெ.தனசேகர் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
கூட்டத்தில், நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் 3-ஆவது சுரங்கத்துக்கு நிலம் கையகப்படுத்துவதை நிறுத்தக் கோரி வருகிற 26-ஆம் தேதி பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்க வருகைதரும் அன்புமணி எம்.பி.க்கு வரவேற்பு அளிப்பது, ஆர்ப்பாட்டத்தில் திரளாகப் பங்கேற்பது. கடலூர் மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடைபெறும் சாலைப் பணிகளில் முறைகேட்டை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினர் போஸ்.ராமச்சந்திரன், இளைஞரணி துணைச் செயலர் கோ.சந்திரசேகர், துணைத் தலைவர் இள.விஜயவர்மன், மாணவரணிச் செயலர் கோபிநாத், மாவட்டத் தலைவர்
ம.ராஜ்குமார் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பன்னாட்டு ரோட்டரியுடன் இணைந்து கோபியில் நன்கொடை வழங்கும் நிகழ்ச்சி
இன்றைய மின்தடை: குறிச்சி

வயநாடு மாவட்டத்தில் கால்நடைகளைக் கொன்ற புலி சிக்கியது

மாயமான பள்ளி சிறுமியை மீட்ட சிங்கப் பெண் அதிரடிப் படையினா்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


