பாம்பு பிடி பூனம்சந்த் குடும்பத்துக்கு நிதியுதவி
"பாம்புப் பிடி மன்னன்' என்றழைக்கப்பட்ட இறந்த பூனம்சந்த் குடும்பத்துக்கு பண்ருட்டி ரோட்டரி சங்கம் சார்பில் ரூ. 28 ஆயிரம் நிதியுதவி அண்மையில் வழங்கப்பட்டது.


"பாம்புப் பிடி மன்னன்' என்றழைக்கப்பட்ட இறந்த பூனம்சந்த் குடும்பத்துக்கு பண்ருட்டி ரோட்டரி சங்கம் சார்பில் ரூ. 28 ஆயிரம் நிதியுதவி அண்மையில் வழங்கப்பட்டது.
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பர். ஆனால், எதற்கும் அஞ்சாமல் தனி ஆளாக கொடிய நஞ்சுள்ள பாம்புகளைப் பிடித்து வந்தவர் பூனம்சந்த். கடலூரில் வசித்து வந்த அவர், கடந்த ஆண்டு பாம்பு கடித்ததில் உயிரிழந்தார்.
வறுமையில் வாடும் அவரது குழந்தைகளின் கல்விச் செலவுக்காக பண்ருட்டி ரோட்டரி சங்கம் சார்பில் ரூ. 28 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது. சங்க அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தத் தொகையை அந்தச் சங்கத்தின் தலைவர் கோ.காமராஜ், தொழில் வர்த்தக சங்கத் தலைவர் டி.சண்முகம், ரோட்டரி
நிர்வாகிகள் ஆர்.சந்திரசேகர், ஏழுமலை, என்.டி.ரவிசேகர், மதன்சந்த் ஆகியோர் வழங்கினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...