தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

என்.எல்.சி.யில் ஒரே நாளில் 15 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன

மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை தென்மண்டல ஜ.ஜி. ஆனந்தமோகன் உத்தரவின்படி, என்.எல்.சி. சிஐஎஸ்எப் யூனிட் பிரிவில் ஒரே நாளில் 15 ஆயிரம் மரக்கன்றுகள் வெள்ளிக்கிழமை நடப்பட்டன.

Updated On :9 ஜூலை 2018, 4:00 am

மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை தென்மண்டல ஜ.ஜி. ஆனந்தமோகன் உத்தரவின்படி, என்.எல்.சி. சிஐஎஸ்எப் யூனிட் பிரிவில் ஒரே நாளில் 15 ஆயிரம் மரக்கன்றுகள் வெள்ளிக்கிழமை நடப்பட்டன.
 மத்திய அரசு இயற்கை வளம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மனித இனத்துக்குத் தேவையான பிராணவாயுவை அதிகரிக்கச் செய்தலுக்காக "வன உற்சவம்' எனும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
 அதன்படி, என்.எல்.சி. இந்தியா நிறுவன மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை சார்பில், 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடத் திட்டமிடப்பட்டது. தொடர்ந்து, அண்மையில் நடைபெற்ற தொடக்க விழாவில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன.
 இதன் தொடர்ச்சியாக சனிக்கிழமை ஒரே நாளில் 15 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன. மூன்று சுரங்கங்கள், மூன்று அனல்மின் நிலையங்கள், பயிற்சி விடுதி, உர ஆலை தலைமை முகாம் ஆகிய இடங்களில் பாதுகாப்பு படை வீரர்கள் புளிய மரம், புங்கன் மரம், அசோக மரம், மா, பலா, கொய்யா, எலுமிச்சை, நெல்லி உள்ளிட்ட மரக்கன்றுகளை நட்டனர்.
 முன்னதாக, உரஆலை முகாம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் என்.எல்.சி. யூனிட் பிரிவு முதுநிலை கமாண்டர் ஷேக் அப்துல்லா தலைமை வகித்து, மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார்.
 நிகழ்ச்சியில் துணை கமாண்டர் சுஜய் குப்தா, சந்தர்வீர் சிங், உதவி கமாண்டர்கள் தபன்வாதுவ, பானுபிரகாஷ், நீலேஷ் கெய்க்வாட், சஞ்சய் பிரசாத், ஆய்வாளர் பழனிவேல் மற்றும் என்.எல்.சி. இந்தியா நிறுவன உயரதிகாரிகள், தொழிலாளர், ஊழியர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.