மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

கறவை மாடு வளர்ப்புப் பயிற்சி

கடலூர் வட்டார வேளாண்மைத் துறை சார்பில் கிழக்கு ராமாபுரத்தில் அட்மா விரிவாக்க மேலாண்மைத் திட்டத்தின் கீழ், கறவை மாடு வளர்ப்பு குறித்த விவசாயிகளுக்கான பண்ணைப் பள்ளி பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

Updated On :9 ஜூலை 2018, 4:00 am

கடலூர் வட்டார வேளாண்மைத் துறை சார்பில் கிழக்கு ராமாபுரத்தில் அட்மா விரிவாக்க மேலாண்மைத் திட்டத்தின் கீழ், கறவை மாடு வளர்ப்பு குறித்த விவசாயிகளுக்கான பண்ணைப் பள்ளி பயிற்சி அண்மையில் நடைபெற்றது.
 இதில் கிழக்கு ராமாபுரத்தில் கறவை மாடு வளர்க்கும் முன்னோடி விவசாயிகள் 25 பேருக்கு பல்வேறு பாடத் தலைப்புகளில் பண்ணை பள்ளி நடத்தப்பட்டது. இதற்கான தொடக்க விழாவுக்கு கடலூர் வட்டார வேளாண்மை விரிவாக்க அலுவலர் சு.பூவராகன் தலைமை வகித்தார். சார்-ஆட்சியர் (பயிற்சி) ப.ஜெகதீஸ்வரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினார்.
 கால்நடை மருத்துவர் ஸ்டாலின் வேதமாணிக்கம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பேராசிரியர் பி.முரளி ஆகியோர் கறவை மாடுகள் பராமரிப்பு, நோய்களைக் கண்டறியும் முறை, அதற்கான சிகிச்சை முறை, முன்தடுப்பு முறைகள் குறித்து விளக்கியதுடன் விவசாயிகளின் சந்தேகங்களுக்கும் பதிலளித்தனர்.
 அசோலா தீவன வளர்ப்பு, ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் தீவன வளர்ப்பு குறித்து முன்னோடி விவசாயி தனசேகரன் விளக்கினார். கறவை மாடு வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள், உலர் மற்றும் பசுந்தீவனம் அளித்தல், மடிவீக்க நோய் தடுப்பு, மினரல் மிக்சர் அளிப்பது, உண்ணிகள் தாக்குதலை தவிர்ப்பது, குடல்புழு நீக்கம், செயற்கை முறை கருத்தரித்தல், சினை ஊசி போடுவது, பால் கறக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய குறிப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
 வேளாண்மை உதவி அலுவலர் சங்கர்தாஸ், அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் இளங்கோவன், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் அருண்ராஜ், கண்ணன் ஆகியோர் பண்ணைப் பள்ளியை ஒருங்கிணைப்பு செய்து கருத்துக் காட்சி அமைத்திருந்தனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.