தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர்கள் சங்கத்தின் 30 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் கடையடைப்புப் போராட்டம், திங்கள்கிழமை (ஜூலை 9) திட்டமிட்டபடி நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்தின் சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை சிதம்பரத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை நிர்வாகத்தின் கீழ், 35 ஆயிரம் நியாய விலைக் கடைகள் உள்ளன. இவற்றில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் 2 ஆயிரம் கடைகள் இயங்குகின்றன. இதன் கீழ் இயங்கும் நியாய விலைக் கடை பணியாளர்களுக்கு கூட்டுறவுத் துறை மூலம் இயங்கும் நியாய விலைக் கடை பணியாளர்களுக்கும் இணையான ஊதியம் வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, ஊதியம் வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்துப் போராடி வருகிறோம். ஆனால், தமிழக அரசு இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்து வருகிறது.
கல்வித் தகுதி அடிப்படையிலும், பணிக் காலத்தைக் கணக்கிட்டும் ஊதிய மாற்றம் செய்ய வேண்டும். மேலும், நியாய விலைக் கடை பணியாளர்கள் 90 சதவீதம் பேருக்கு ஓய்வூதியம் கிடையாது. மீதமுள்ள 10 சதவீதம் பேருக்கு பிடித்தம் செய்யப்படும் இபிஎஃப் தொகையை அரசு செலுத்தாததால், அவர்களுக்கும் ஓய்வூதியம் கிடைக்காத நிலை உருவாகியுள்ளது.
பொது விநியோகத் திட்டத்தில் வருவாய்த் துறை, கூட்டுறவுத் துறை, நுகர்பொருள் துறை, தொழிலாளர் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் நிர்வாகத்தில் பங்கேற்பதால், பணியாளர்களிடம் மாமூல் தொகை கேட்கும் நிலை உள்ளது. எனவே, பொது விநியோகத் திட்டத்துக்கு தனியாக ஒரு துறையை அமைக்க வேண்டும். நியாய விலைக் கடைகளுக்குச் சரியான எடையில் பொருள்களை வழங்க வேண்டும். பணியாளர்களுக்கான மருத்துவப்படியை ரூ. 300- ஆக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திங்கள்கிழமை (ஜூலை 9) வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தோம்.
அரசின் செயலர் உள்ளிட்டோர் முன்னிலையில் மூன்று முறை பேச்சுவார்த்தை நடைபெற்றும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. எனவே, நியாய விலைக் கடை பணியாளர்களின் மாநிலம் தழுவிய கடை அடைப்புப் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்றார் அவர். இந்தப் பேட்டியின் போது, தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலர் ஜி.ஜெயச்சந்திரராஜா, மாநிலத் துணைத் தலைவர் துரை.சேகர், மாவட்டத் தலைவர் நரசிம்மன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாயக்கனேரி மலை அரசுப் பள்ளி தரம் உயா்த்தப்படும்: திமுக வேட்பாளா்

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தோ்வு: அரக்கோணம் பள்ளி மாணவி சிறப்பிடம்

மாட்டு வண்டியில் சென்று அதிமுக வேட்பாளா் பிரசாரம்

தென்காசி தொகுதியில் சுயேச்சையாக களம் காணும் விவசாயி!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

