நெல்லிக்குப்பம், விருத்தாசலம் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி வலியுறுத்தியது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் அ.த.ஸ்ரீரங்கன்பிரகாஷ் வெளியிட்ட அறிக்கை: கடலூர் மாவட்டத்தில் நெல்லிக்குப்பம், விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர். இதுதொடர்பாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே, குடிநீர் பிரச்னையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
கடலூரில் பாரதி சாலையில் தோண்டப்பட்ட அபாயகரமான பள்ளங்களை மூட வேண்டும். ஆதிதிராவிடர் நலத் துறை மூலம் இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு மனு கொடுத்துள்ள ஆதிதிராவிடர் மக்களுக்கு கடந்த 20 ஆண்டுகளாக வீட்டுமனைப் பட்டா வழங்காத நிலை உள்ளதை கண்டிக்கிறோம்.
ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கிப்படிக்கும் மாணவர்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்துவதோடு, அந்த விடுதிகளில் நடைபெறும் முறைகேடுகளைக் களைந்திட மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் வலியுறுத்தி உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








