விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

டின உழைப்பே மாணவர்களுக்கு வெற்றியை தரும்

கடின உழைப்பே மாணவர்களுக்கு வெற்றியைத் தரும் என ஜவஹர் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் என்எல்சி இந்தியா நிறுவனத் தலைவர் சரத்குமார் ஆச்சார்யா கூறினார். 

Updated On :23 ஜூலை 2018, 8:53 am IST

கடின உழைப்பே மாணவர்களுக்கு வெற்றியைத் தரும் என ஜவஹர் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் என்எல்சி இந்தியா நிறுவனத் தலைவர் சரத்குமார் ஆச்சார்யா கூறினார். 
என்எல்சி இந்தியா நிறுவனத்தால் ஜவஹர் கல்விக் கழகத்தின் கீழ் ஜவஹர் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியின் 11-ஆவது பட்டமளிப்பு விழா புதிய கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஜவஹர் கல்விக் கழகத்தின் தலைமைப் புரவலரும், என்எல்சி இந்தியா நிறுவன தலைவருமான சரத்குமார் ஆச்சார்யா, 2016-17-ஆம் கல்வியாண்டில் தேர்ச்சி பெற்ற 266 இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் சரத்குமார் ஆச்சார்யா பேசியதாவது: 
வெற்றி என்பது அதிருஷ்டத்தால் வருவதல்ல. ஒருவரது கடின உழைப்பே வெற்றியைத் தரும். பட்டம் பெற்ற மாணவர்கள் வாழ்க்கையிலும் வெற்றி பெற தோல்விகளைக் கண்டு மனம் தளராது கடின உழைப்பைத் தொடரவேண்டும். நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் சிறந்த குடிமகனாக திகழ்ந்து சாதனை படைக்க வேண்டும் என்றார் அவர். விழாவுக்கு என்எல்சி இந்தியா நிறுவன மனித வளத் துறை இயக்குநர் ஆர்.விக்ரமன் தலைமை வகித்துப் பேசினார். விழாவில், நிலயியல் மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை துறைகளில் திருவள்ளுவர் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்ற கமலி, சசிபிரியன் ஆகியோருக்கு பதக்கம், கேடயம் வழங்கப்பட்டன. கல்லூரியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு, என்எல்சி முன்னாள் தலைவர் சஹாய் அவர்களின் துணைவியார் நிரஜா சஹாய் நினைவாக விருதுகள், பதக்கங்கள், ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு துறையிலும் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில், ஜவஹர் கல்விக் கழக துணைத் தலைவர் செந்தில்குமார், செயலர் ரவிச்சந்திரன், ஜவஹர் கல்லூரிச் செயலர் விநாயகமூர்த்தி, கல்லூரி முதல்வர் சந்திரசேகரன் ஆகியோர் பேசினர். 
என்எல்சி இந்தியா நிறுவன நிதித் துறை இயக்குநர் ராக்கேஷ் குமார், திட்டம் மற்றும் செயலாக்கத் துறை இயக்குநர் நாதெள்ள நாகமகேஸ்வர் ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.