கடலூர் அருகே உள்ள தேவனாம்பட்டினம் கிராமத்தினருக்கும், சோனங்குப்பம் கிராமத்தினருக்கும் இடையே கடலில் மீன் பிடிக்கப் பயன்படுத்தும் வலை தொடர்பாக அண்மையில் தகராறு ஏற்பட்டது. அப்போது, சோனங்குப்பத்தைச் சேர்ந்த அதிமுக கிளைச் செயலர் க.பஞ்சநாதன் (64), தேவனாம்பட்டினம் மீனவர்களின் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இதுதொடர்பாக 21 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, இதுவரை 15 பேரை கைது செய்துள்ளனர். இவர்களில் 3 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், தாழங்குடாவைச் சேர்ந்த ஒருவரை கத்தியைக் காட்டி மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட தேவனாம்பட்டினம் கிருஷ்ணன் மகன் பலராமனுக்கு (32), அதிமுக பிரமுகர் கொலையில் தொடர்பிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, அவரது குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் வகையில், குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடக் கோரி, மாவட்ட ஆட்சியருக்கு காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் பரிந்துரைத்தார்.
இதையேற்று, மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி அதற்கான உத்தரவை வழங்கினார். இதையடுத்து, பலராமன் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, புதன்கிழமை கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








