கோயில் திருவிழாக்களில் 23 பவுன் தாலிச் சரடுகள் திருட்டு

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் மாசிமகத் தேரோட்டத்தில் பங்கேற்ற பெண்களிடம் மர்ம நபர்கள் தாலிச் சரடுகளைப் பறித்துச் சென்றனர்.
Updated on
1 min read

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் மாசிமகத் தேரோட்டத்தில் பங்கேற்ற பெண்களிடம் மர்ம நபர்கள் தாலிச் சரடுகளைப் பறித்துச் சென்றனர்.
 விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் மாசிமகத் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், ஆலடி கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன் மனைவி குப்பம்மாள் (56), எடைச்சித்தூர் கிராமத்தைச் சேர்ந்த கனகாம்பரம், விருத்தாசலத்தைச் சேர்ந்த நாகலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது கூட்டத்தில் புகுந்த மர்ம நபர்கள் குப்பம்மாளிடமிருந்து 7 பவுன் தாலிச் சரடு, கனகாம்பரத்திடமிருந்து 2 பவுன் தாலிச் சரடு, நாகலட்சுமியிடமிருந்து 3 பவுன் தாலிச் சரடை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
 இதேபோல, திட்டக்குடி அசனாம்பிகை உடனுறை விஸ்வநாதர் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்ட அண்ணாதுரை மனைவி சந்திராவிடமிருந்து 7 பவுன் தாலிச் சரடு, சின்னத்துரை மனைவி லட்சுமியிடமிருந்து மூன்றரை பவுன் தாலிச் சரடை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். தாலிச் சரடுகளை பறிகொடுத்த 5 பெண்களும் அளித்தப் புகாரின் பேரில், விருத்தாசலம், திட்டக்குடி காவல் துறையினர் தனித் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com