விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அனைத்துக் குடியிருப்போர் நலச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் 

கடலூரில் ஆர்.எம்.எஸ். அலுவலகம் மூடப்படுவதைக் கண்டித்து, அனைத்துக் குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Updated On :29 மார்ச் 2018, 3:12 am

கடலூரில் ஆர்.எம்.எஸ். அலுவலகம் மூடப்படுவதைக் கண்டித்து, அனைத்துக் குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 சுமார் 60 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததும், தினமும் சுமார் 15,000 தபால்களைப் பிரிக்கும் திறன் கொண்ட திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையத்தில் உள்ள
 ஆர்.எம்.எஸ். தபால் பிரிப்பு அலுவலகத்தை மூடுவதற்கு உத்தேசித்துள்ள திட்டத்தைக் கைவிட வேண்டும். திருப்பாதிரிபுலியூர், துறைமுகம் ரயில் நிலையங்கள் வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும்.
 துறைமுகம் சந்திப்பிலிருந்து திருச்சிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயிலை திருப்பாதிரிபுலியூரிலிருந்து இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் அனைத்துக் குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பினர் கடலூர் திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையம் எதிரே புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் தலைவர் பி.வெங்கடேசன் தலைமை வகித்தார். இணைப் பொதுச் செயலர் புருஷோத்தமன் முன்னிலை வகித்தார். நுகர்வோர்கள் கூட்டமைப்புத் தலைவர் எம்.நிஜாமுதீன் ஆர்ப்பாட்டத்தைத் தொடக்கிவைத்துப் பேசினார். ஆர்.எம்.எஸ். அலுவலர்கள் சங்கத்தின் திருச்சிக் கோட்டத் துணைப் பொதுச் செயலர் குணசேகரன், கிளைச் செயலர் ரவி, வர்த்தகச் சங்கத்தின் தலைவர் வி.பி.எஸ்.கணேசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். கூட்டமைப்பின் பொதுச் செயலர் மு.மருதவாணன் நிறைவுரையாற்றினார்.
 ஆர்.எம்.எஸ். பிரிவை மூடும் முடிவைக் கைவிடவில்லையெனில், பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி, அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே உண்ணாவிரதம் இருப்பதென கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.