காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, கடலூரில் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் மண்டலம் வாரியாக ஆர்ப்பாட்டம் நடைபெறுமென தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடலூரில் மாவட்ட ஆட்சியரின் பழைய அலுவலகம் அருகே திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில துணைத் தலைவர் கு.சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் கே.வெற்றிவேல், அமைப்புச் செயலர் டி.காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் கோ.சீனுவாசன், சங்கத்தின் மத்திய செயற்குழு உறுப்பினர் ஏ.அரிகிருஷ்ணன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை வாழ்த்திப் பேசினர்.
சங்க நிர்வாகிகள் எஸ்.டி.கருணாகரன், ஏ.முத்துகுமரன், ஜி.இளங்கோ, டி.ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்று, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தி முழக்
கமிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாயக்கனேரி மலை அரசுப் பள்ளி தரம் உயா்த்தப்படும்: திமுக வேட்பாளா்

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தோ்வு: அரக்கோணம் பள்ளி மாணவி சிறப்பிடம்

மாட்டு வண்டியில் சென்று அதிமுக வேட்பாளா் பிரசாரம்

தென்காசி தொகுதியில் சுயேச்சையாக களம் காணும் விவசாயி!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

