வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

அரசுக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

விருத்தாசலத்தில் உள்ள கொளஞ்சியப்பர் அரசுக் கலைக் கல்லூரியில், 19 ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :14 மே 2018, 10:51 pm

விருத்தாசலத்தில் உள்ள கொளஞ்சியப்பர் அரசுக் கலைக் கல்லூரியில், 19 ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கல்லூரியில் 1996-99-ஆம் ஆண்டுகளில் வணிகவியல் துறையில் பயின்ற மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இதில், இந்தக் கல்லூரியில் பயின்று தற்போது அரசு, தனியார் துறைகளில் பணிபுரிந்து வருவோர், சுயதொழில் புரிவோர் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்று ஒருவரையொருவர் நெகிழ்ச்சியுடன் நலம் விசாரித்துக் கொண்டனர்.
மேலும், தாங்கள் படித்தக் காலத்திய பேராசிரியர்கள் நடராஜன், கஸ்தூரிமீனாட்சி, தற்போதைய பேராசிரியர்கள் பரமசிவம், ராமச்சந்திரன் ஆகியோரையும் அழைத்து கெளரவப்படுத்தியதோடு அவர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி தங்களது பழைய நினைவுகளைப் பகிர்ந்துக் கொண்டனர்.
விழாக் குழு சார்பாக பேராசிரியர் மா.மணிவண்ணன் வரவேற்க, திரைப்பட இயக்குநர் மு.சண்முகம் தனது நண்பர்களையும் அவர்கள் சார்ந்த தொழிலையும் குறித்து விரிவாக எடுத்துக்கூறினார்.
பேராசிரியர் ம.வேல்முருகன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.