விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

குடிநீர் பிரச்னை: பொதுமக்கள் போராட்டம்

பொன்னேரி கிராமத்தில் நிலவும் குடிநீர்ப் பிரச்னையைக் கண்டித்து பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On :5 நவம்பர் 2018, 8:57 am IST

பொன்னேரி கிராமத்தில் நிலவும் குடிநீர்ப் பிரச்னையைக் கண்டித்து பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்டது பொன்னேரி கிராமம். கோ.மாவிடந்தல் ஊராட்சிக்கு உள்பட்ட இந்தக் கிராமத்தில் சுமார் 700 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி மக்களின் குடிநீர்த் தேவைக்காக ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு மின்மோட்டார் மூலமாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மின்மோட்டார் பழுதடைந்ததாம். இதுதொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
 எனவே, குடிநீர்த் தேவைக்காக கிராம மக்கள் அருகே உள்ள கிராமத்துக்குச் சென்றும், விவசாய விளைநிலங்களில் பயிர்களுக்கு பாய்ச்சப்படும் தண்ணீரையும் பிடித்து சமாளித்து வந்தனர். எனினும், குடிநீர்ப் பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்கப்படாததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்து ஞாயிற்றுக்கிழமை விருத்தாசலம்-சிதம்பரம் சாலையில் காலிக் குடங்களுடன் மறியலில் ஈடுபட முயன்றனர்.
 இதுகுறித்து தகவலறிந்த விருத்தாசலம் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, பொதுமக்கள் சாலையோரத்தில் நின்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலை மறியலில் ஈடுபடுவதாக பொதுமக்கள் தெரிவித்து கலைந்துச் சென்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.