திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!கண்தானம் செய்திருந்த பாக்யராஜ்! மறைந்தாலும் உலகைக் கண்பார்!கே. பாக்யராஜ் உடலுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

பயிர்க் காப்பீட்டு திட்ட முகாம்

கடலூர் மண்டல கூட்டுறவுத் துறை மூலம் கடன் பெறாத விவசாயிகளுக்கான பயிர்க் காப்பீடு திட்டம் தொடர்பான சிறப்பு முகாம், உறுப்பினர் கல்வித் திட்ட முகாம் க

Updated On :5 நவம்பர் 2018, 8:57 am IST

கடலூர் மண்டல கூட்டுறவுத் துறை மூலம் கடன் பெறாத விவசாயிகளுக்கான பயிர்க் காப்பீடு திட்டம் தொடர்பான சிறப்பு முகாம், உறுப்பினர் கல்வித் திட்ட முகாம் கடலூர் வட்டம், வரக்கால்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அண்மையில் நடைபெற்றது.
 நிகழ்ச்சிக்கு கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் ஜி.அண்ணாதுரை தலைமை வகித்தார். கடலூர் சரக துணைப் பதிவாளர் பா.வெங்கடாசலபதி, கடலூர் வேளாண்மை உதவி இயக்குநர் சு.பூவராகன், கள அலுவலர் கே.பாஸ்கர் ஆகியோர் பங்கேற்று பயிர்க்காப்பீடு திட்டம் குறித்து விளக்கிப் பேசினர்.
 அப்போது, பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கடன் பெறாத விவசாயிகள் அனைவரும் ஏக்கருக்கு ரூ.405 வீதம் பிரீமியமாகச் செலுத்தி இந்தத் திட்டத்தில் சேரலாம். தங்களது சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் நகல் ஆகிய ஆவணங்களை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் வழங்கி பதிவு செய்துக் கொள்ளலாம். பிரீமியம் தொகையை வருகிற 30-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று விளக்கப்பட்டது.
 முகாமில், கூட்டுறவு சங்கச் செயலர்கள் டி.புருஷோத்தமன் (வில்வராயநத்தம்), வடிவேலு (மருதாடு), வெங்கடேசன் (சேடப்பாளையம்), வேளாண்மை உதவி அலுவலர்கள் சிவமணி, பிரபாகரன், ரஜினிகாந்த், கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெயந்தி, சரளா, சசிகலா உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக இரண்டாயிரம் விளாம் கூட்டுறவு சங்க செயலர் பி.ஜெயச்சந்திரன் வரவேற்க, வரக்கால்பட்டு சங்கச் செயலர் டி.விஜயபாலன் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.