கடலூரில் கார் மோதியதில் இரண்டு பெண்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தனர்.
கடலூர் ஆல்பேட்டை பகுதியில் தனியார் மருத்துவமனை உள்ளது. இங்கு, கடலூர் அருகே உள்ள உச்சிமேட்டைச் சேர்ந்த மாதவன் மனைவி தேவசேனா (40), வானமாதேவியைச் சேர்ந்த பாப்பாத்தி (45) ஆகியோர் துப்புரவுத் தொழிலாளர்களாகப் பணிபுரிந்து வந்தனர். ஞாயிற்றுக்கிழமை இரவு பணிமுடிந்து, வீட்டுக்குச் செல்வதற்காக புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகச் சாலை வழியாக நடந்து சென்றுக்கொண்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து இரண்டு பெண்கள் மீதும் மோதியது.
இந்த விபத்தில், தேவசேனா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமுற்ற பாப்பாத்தி, கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு அவரும் உயிரிழந்தார்.
விபத்து குறித்து கடலூர் புதுநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!

கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடிப்பதற்கு புதிய சட்ட முன்வரைவு தேவை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

