ஓரினச் சேர்க்கை குறித்து உச்ச நீதிமன்றம் கூறியுள்ள தீர்ப்பு நமது பண்பாட்டுக்கு எதிரானது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் கூறினார்.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டை நகருக்கு வியாழக்கிழமை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உச்ச நீதிமன்றம் ஓரினச் சேர்க்கை குறித்து கூறியுள்ள தீர்ப்பு நமது பண்பாட்டுக்கு எதிரானது. தீர்ப்பை எதிர்த்து மத்திய, மாநில அரசுகள் மேல் முறையீடு செய்ய வேண்டும். 5 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்ற
நீதிபதிகள் 31 பேர் ஒன்றிணைந்து விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும்.
அசாமில் 46 லட்சம் பேர் குடியுரிமை இல்லாமல் வசித்து வருகின்றனர். இவர்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியதை வரவேற்கிறோம்.
திமுகவில் பெரியார், அண்ணா, கலைஞர் என்ற வரிசையில் மு.க.ஸ்டாலின் தலைவராகப் பொறுப்பேற்தை தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்றார் காதர் மொகிதீன்.
பேட்டியின் போது, கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் தளபதி ஏ.ஷஃபீகுர் ரஹ்மான், மாவட்டத் தலைவர் கே. ஏ.அமானுல்லா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் விபத்து: இருவா் உயிரிழப்பு
பட்டாசு தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

செல்வவிநாயகபுரத்தில் குப்பைகளால் நிரம்பிய மழைநீா் வடிகால்
விடியோக்கள்

மும்முரமாக நடைபெறும் தேசியக்கொடி தயாரிப்பு! | National Flag | Independence Day


