முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மருத்துவம், தொழில் கல்வி, மேலாண்மையியல் போன்ற படிப்புகளில் சேர்க்கைபெற்ற, முன்னாள் படைவீரர்கள், படைப்பணியின் போது இறந்த படைவீரர்களின் குழந்தைகளுக்கு பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் (2018-19) உதவித் தொகை வழங்கப்படவுள்ளது. இந்த உதவித் தொகையைப் பெற பிளஸ்2, முதுகலை பட்டத்துக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியில் 60 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும். மேலும் 2018-19-ஆம் கல்வியாண்டில் சேர்க்கைப் பெற்றவர்களுக்கு மட்டுமே இந்தத் திட்டம் பொருந்தும்.
பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற ww.ksb.gov.in என்ற இணையதள முகவரி மூலம் நேரடியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த பின்னர் உரிய ஆவணங்களை சரிபார்த்தலுக்காக முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் 15.11.2018 ஆகும்.
மேலும், விவரங்களுக்கு கடலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04142-294732 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்புகொண்டு பயன்பெறலாம் என அதில் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







