இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

வடலூர் சத்திய ஞான சபையில் ஆவணி மாத ஜோதி தரிசனம்

வடலூர் சத்திய ஞான சபையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆவணி மாத ஜோதி தரிசனத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Published On :30 ஜனவரி 2024, 10:12 pm IST

வடலூர் சத்திய ஞான சபையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆவணி மாத ஜோதி தரிசனத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரத்தில் ஜோதி தரிசன விழா நடைபெற்றது வருகிறது. ஆவணி மாத பூச நட்சத்திரத்தையொட்டி, வியாழக்கிழமை காலை தரும சாலையில் திருஅருள்பா முற்றோதுதல் அகவல் பாடப்பட்டது. தொடர்ந்து, நண்பகல் 12 மணிக்கு ஞான சபையில் சிறப்பு பூஜை செய்து, ஜோதி தரிசனம் நடைபெற்றது. பின்னர், மாலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை ஆறு திரைகளை நீக்கி சிறப்பு ஜோதி தரிசனம் நடைபெற்றது. 
நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் செந்தில்வேலவன், செயல் அலுவலர் கருணாகரன் மற்றும் வடலூர் சுற்று வட்டப் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு ஜோதி தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.