பள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

கடலூர் அரசு மருத்துவமனை எதிரே மாற்றுத் திறனாளிகள் போராட்டம்

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் மாதந்தோறும் 5-ஆம் தேதி நடத்தப்பட வேண்டிய மருத்துவ முகாம் புதன்கிழமை நடத்தப்படாததால், பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள்

Published On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் மாதந்தோறும் 5-ஆம் தேதி நடத்தப்பட வேண்டிய மருத்துவ முகாம் புதன்கிழமை நடத்தப்படாததால், பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 20 பேர் மருத்துவமனை எதிரே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் மாதந்தோறும் 5-ஆம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெறுவது வழக்கம்.
 அன்றைய தினம் மருத்துவரை சந்தித்து சான்று பெறும் மாற்றித் திறனாளிகள் அடையாள அட்டைகளையும் பெறுவர்.
 இந்த நிலையில் புதன்கிழமை (செப்.5) மருத்துவ முகாமில் பங்கேற்பதற்காக சுமார் 20 மாற்றுத் திறனாளிகள் கடலூர் அரசு மருத்துவமனைக்கு வந்திருந்தனர். ஆனால், அரசு மருத்துவர்கள் மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரி, போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததால் மாற்றுத் திறனாளிகள் முகாமில் கலந்து கொள்ளவில்லையாம்.
 இதனால், சான்றிதழ் பெற முடியாமல் மாற்றுத் திறனாளிகள் ஏமாற்றமடைந்தனர். இதைக் கண்டித்து, 20-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கடலூர் அரசு மருத்துவமனை எதிரே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 தகவலறிந்த அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இந்தச் சம்பவத்தால் கடலூர் அரசுத் தலைமை மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.