
பெண்ணாடத்தில் செவ்வாய்க்கிழமை இரவு சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது.
கடலூர் மாவட்டம், திட்டக்குடி, பெண்ணாடம் பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி அளவில் சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் நீடித்த மழையால், அந்தப் பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
இந்த மழையால் பெண்ணாடம் - கொள்ளத்தன்குறிச்சி சாலையில் வள்ளலார் அற நிலையம் அருகே சுமார் 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அரசமரம் வேருடன் சாய்ந்தது. இதனால், அந்தப் பகுதியில் இருந்த 6 மின் கம்பங்கள் சேதமடைந்தன.
இதையடுத்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சாலையில் விழுந்த மரத்தை அகற்றும் பணியிலும், மின் கம்பங்களைச் சீரமைக்கும் பணியிலும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
பெண்ணாடம் உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால், மழைநீர் செல்ல வழியில்லாமல் அந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால், அந்தப் பகுதி மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






