ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

வழித்தடம் மாற்றத்துக்கு எதிர்ப்பு: ஆட்டோ ஓட்டுநர்கள் மனு

கடலூரில் ஆட்டோக்களுக்கான வழித்தட மாற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடலூர் உள்கோட்ட காவல்

Published On :

கடலூரில் ஆட்டோக்களுக்கான வழித்தட மாற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடலூர் உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் மனு அளித்தனர். 
 கடலூர் நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், பேருந்து நிலையத்திலிருந்து திருவந்திபுரம் செல்லும் ஆட்டோக்களை மாவட்ட காவல் துறை முறைப்படுத்தி உள்ளது. அதாவது, பேருந்து நிலையம் நாகம்மன்கோயில் அருகிலிருந்து திருவந்திபுரம் சென்று திரும்பும் அனைத்து ஆட்டோக்களும் இம்பீரியல் சாலை வழியாக  மேம்பாலம் சென்று வரவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. 
இந்த புதிய உத்தரவால் ஆட்டோ ஓட்டுநர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி செவ்வாய்க்கிழமை அம்பேத்கர் அபே சிட்டி, அபே ஆட்டோ ஓட்டுநர்கள் நலச் சங்கத்தினர் சட்ட ஆலோசகர் பா.தாமரைச்செல்வன் தலைமையில் கடலூர் உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் த.அ.ஜொ.லாமேக்கை சந்தித்து மனு அளித்தனர்.
 அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: திருவந்திபுரம் செல்லும் ஆட்டோக்கள் பழைய வழியாகவும், திரும்பி வரும் வாகனங்கள் புதிய நடைமுறையை கடைப்பிடிக்கும் வகையிலும் மறு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். புதிய உத்தரவினால் சுமார் 65 ஆட்டோ ஓட்டுநர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த மனுவில் குறிப்பிட்டனர்.
 சங்க நிர்வாகிகள் த.முரளி, சின்னதுரை, பழனிவேல், முருகையன் , முருகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ப.ரா.முரளி, மாவட்ட துணை அமைப்பாளர் ரவி, சலிம்வளவன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.