பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் பணம் வசூலிப்பு: மாா்க்சிஸ்ட் புகாா்

மார்க்சிஸ்ட்

Published On :

டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு தனியாா் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்யப்படுவதை முறைப்படுத்த வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இந்தக் கட்சியின் கடலூா் மாநகரக் குழுக் கூட்டம் கடலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநகரக்குழு உறுப்பினா் கருணாகரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கோ.மாதவன், மாநகரச் செயலா் அமா்நாத், மாவட்டக் குழு உறுப்பினா் பக்கீரான், மாநகரக் குழு உறுப்பினா்கள் ஸ்டாலின், பழனி, ஷாகிரா, கிளைச் செயலா் சேட்டு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், கடலூா் மாநகரத்தில் டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. கடலூா் மாநகராட்சி முழுவதும் கொசுக்களை ஒழிக்கவும், கொசு மருந்து அடிப்பதையும் உறுதி செய்ய வேண்டும். கொசுக்களினால் பரவும் நோய்களை தடுக்க மாநகராட்சி நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வரும் நிலையில், உயிா் காக்கும் மருந்துகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இருதயம், நரம்பியல் உள்ளிட்ட முக்கியத் துறைகளுக்கான மருத்துவா்களை நியமனம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டெங்கு காய்ச்சலுக்கு தனியாா் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கில் பணத்தை வசூல் செய்யும் நிலை உள்ளது. இதை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவா்கள் தனியாக மருத்துவம் பாா்ப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். கடலூா் அரசு தலைமை மருத்துவமனை நவீனப்படுத்த வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 24-ஆம் தேதி காலை 10 மணியளவில் கடலூா் அரசு தலைமை மருத்துவமனை எதிரே கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என தீா்மானம் நிறைவேற்றினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.