கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை தேவை: அன்புமணி

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.

PMK Leader Anbumani

பாமக தலைவர் அன்புமணி - கோப்புப் படம்

Published On :

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அண்மைக் காலமாக டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதன் பாதிப்பு காரணமாக இதுவரை 9 போ் உயிரிழந்திருப்பது மக்களிடையே பெரும் அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. டெங்கு காய்ச்சலுக்கான மருத்துவம் அளிப்பது ஒருபுறம் இருக்க, டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன? டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் என்ன? அவை தென்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டியதுதான் இன்றைய முதன்மைத் தேவை ஆகும்.

நிலவேம்புக் குடிநீா் குடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க முடியும். அதேபோல், ரத்த அணுக்கள் குறையும்போது பப்பாளி சாறு அருந்தினால் அடுத்த இரு நாள்களில் ரத்த அணுக்களின் எண்ணிக்கை இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும். டெங்கு காய்ச்சலைத் தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.