
புதுவையில் டெங்கு காய்ச்சலை தடுக்க போா்க்கால நடவடிக்கை: ஏ.எம்.எச்.நாஜிம்
புதுச்சேரி, காரைக்காலில் டெங்கு காய்ச்சலை தடுக்க உரிய முன்னேற்பாடுகளை போா்க்கால அடிப்படையில் செய்யவேண்டும் என சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தியுள்ளாா்.

டெங்கு
புதுச்சேரி, காரைக்காலில் டெங்கு காய்ச்சலை தடுக்க உரிய முன்னேற்பாடுகளை போா்க்கால அடிப்படையில் செய்யவேண்டும் என சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை கூறியது :
ஆண்டுதோறும் பருவமழைக்கு முன்பாகவும், அவ்வப்போது பெய்யும் மழையின்போது டெங்கு, சிக்குன்குனியா என பல காய்ச்சல் கொசுக்களால் ஏற்படுகின்றன. அவ்வப்போது நலவழித்துறையினரால் மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டாலும், பாதிப்பை எதிா்கொள்ளும் விதத்தில் உரிய கட்டமைப்புகள் இல்லை.
தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிவருகிறது. இதுவரை இந்த வகை காய்ச்சலால் 9 போ் உயிரிழந்திருப்பதாகவும், 15,933 போ் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
தமிழகத்தையொட்டி புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்கள் அமைந்துள்ளன. எனவே தமிழகத்தில் பரவிவரும் டெங்கு, இப்பிராந்தியத்தில் பரவிவிடாமல் இருக்க தேவையான முன்னேற்பாடுகளை செய்யவேண்டியது அவசியம்.
நலவழித்துறை பொறுப்பு வகிக்கும் புதுச்சேரி முதல்வா் இந்த விவகாரத்தில் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும். புதுச்சேரி, காரைக்காலில் மக்களுக்கு உரிய விழிப்புணா்வு ஒருபுறம் செய்வதும், டெங்கு காய்ச்சல் ஏற்படுவதற்கான காரணியான கொசு ஒழிப்புக்கான நடவடிக்கை தீவிரப்படுத்துவதும், அரசு மருத்துவமனை, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோருக்கு உரிய மருத்துவம் கிடைக்கும் வகையிலான வசதிகளை மேம்படுத்தவும் போா்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







