6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

வானபுரீஸ்வரர் கோயில் தேர் வெள்ளோட்டம்

கடலூர் அருகே உள்ள திருமாணிக்குழியில் அமைந்துள்ள ஸ்ரீஅம்புஜாட்சி வானபுரீஸ்வரர் கோயில் தேர் வெள்ளோட்டம்  புதன்கிழமை நடைபெற்றது.

Published On :

கடலூர் அருகே உள்ள திருமாணிக்குழியில் அமைந்துள்ள ஸ்ரீஅம்புஜாட்சி வானபுரீஸ்வரர் கோயில் தேர் வெள்ளோட்டம்  புதன்கிழமை நடைபெற்றது.
 இந்தக் கோயிலுக்கு ரூ.20 லட்சத்தில் புதியதாக திருத்தேர் செய்யப்பட்டது. புதிய திருத்தேரின் வெள்ளோட்டம் புதன்கிழமை காலையில் நடைபெற்றது. முன்னதாக அம்புஜாட்சி வானபுரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம் ஆகியவை நடத்தப்பட்டு கலச அபிஷேகமும் நடைபெற்றது. கலசத்துக்கு தீபாராதனை செய்து கலசம் கோயிலில் இருந்து புறப்பட்டு கோயிலை சுற்றி பிறகு தேர்மீது வைக்கப்பட்டது. அதன்பின்னர் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். கோயிலின் நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்த திருத்தேர் பின்னர் நிலையை அடைந்தது.தொடர்ந்து, மகா தீபாராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.