அம்மா இரு சக்கர வாகன மானிய திட்டத்துக்கு விண்ணப்பிக்க அவகாசம் வருகிற 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நிலைகளில் பணிபுரிந்து வரும் பெண்களுக்கு 50 விழுக்காடு (அதிகபட்சம் ரூ.25 ஆயிரம்) மானியத்தில் தமிழக அரசால் இருசக்கர வாகனம் வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கான வாகனம் வாங்குவோருக்கு வாகனத் தொகையில் 50 சதவீதம் அல்லது ரூ. 31,250 வரை வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தில், வேலைக்குச் செல்லும் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இதற்கான காலக்கெடு ஜன.18-ஆம் தேதியாக இருந்ததை தற்போது கால நீட்டிப்பு செய்து, இந்த மாதம் 31-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளார்.
எனவே, கடலூர் மாவட்டத்தில் உள்ள வேலைக்கு செல்லும் அனைத்து பெண்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகம் அல்லது நகராட்சி அலுவலகத்தில் நேரடியாகவோ, பதிவு தபால் மூலமாகவோ தங்களின் விண்ணப்பங்களை சேர்க்க வேண்டும்.
இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, கடலூர் மகளிர் திட்ட அலுவலகத்தை 04142 - 292143 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட செய்தி-மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்க
ப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாஃபியாவின் பிடியில் கல்வி அமைப்புமுறை: கேஜரிவால் குற்றச்சாட்டு
இன்றைய ராசி பலன் (31.05.2026) - விருச்சிகம்

இன்றைய ராசி பலன்கள் (மே 31 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு அமைதி!

தைரியம் கூடும் மகர ராசிக்கு: இன்றைய ராசி பலன்கள் (மே 31)
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


