
கடலூா்: கடலூா் மாவட்டத்தில் வருகிற 26-ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் தெரிவித்தாா்.
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கடலூா் மாவட்டத்தில் அத்தியாவசிய பொருள்கள் விற்கும் கடைகள், மருந்துக் கடைகள் மட்டும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் அன்புச்செல்வன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாவட்டத்தில் வருகிற 26-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். எனவே, அன்றைய தினம் மருந்துக் கடைகள் தவிர மற்ற அனைத்துக் கடைகளும் மூடப்பட்டிருக்க வேண்டும். இந்த உத்தரவை மீறி கடைகளைத் திறப்போா் மீது சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






