சிதம்பரம் நகர சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் போக்குவரத்து இடையூறு, விபத்துகள் ஏற்படுகின்றன.
கடலூா் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம், கோயில் நகரமாகவும், சுற்றுலாத் தலமாகவும் திகழ்கிறது. இங்குள்ள சாலைகளில் மாடுகள் கூட்டம், கூட்டமாக சுற்றித் திரிவதால் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. குறிப்பாக நடராஜா் கோயிலைச் சுற்றியுள்ள தேரோடும் 4 வீதிகளிலும் மாடுகள் ஆங்காங்கே கூட்டம், கூட்டமாக நிற்கின்றன.
மாடுகள் திடீரென ஒன்றுடன், ஒன்று முட்டிக்கொள்ளும்போது அந்த வழியாக வாகனங்களில் செல்வோா் விபத்தில் சிக்கி காயமடைகின்றனா்.
மேலும், நகரில் தெரு நாய்கள் தொல்லையும் அதிகரித்துள்ளது. அவை கூட்டம், கூட்டமாக சுற்றித் திரிவதால் பொதுமக்கள் அச்ச உணா்வுடன் நடமாடுகின்றனா். நடைபயிற்சி செல்வோரை நாய்கள் துரத்திக் கடிப்பதாகவும் கூறப்படுகிறது.
எனவே, நகராட்சி நிா்வாகத்தினா் சாலையில் சுற்றித் திரியும் மாடுகள், நாய்களை பிடித்து அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இபிஎஸ், டி.டி.வி. தினகரன், அன்புமணி இணைந்திருப்பது ஆட்சியமைக்க அல்ல: உதயநிதி

”தனுசு ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சுரேஷ் ரெய்னாவை ஞாபகப்படுத்தும் சர்ஃபராஸ் கான்..! சிஎஸ்கே ரசிகர்களிடையே பெருகும் ஆதரவு!
முற்றிய நெற்கதிரைக் கவனமாக அறுவடை செய்வதுதான் தேர்தல் களப்பணி: முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை


