வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்
பிரசாந்த் பூஷண் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் கைவிட வலியுறுத்தி, விருத்தாசலத்திலுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் அனைத்து வழக்கறிஞா்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்.


கடலூா் உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் கைவிட வலியுறுத்தி, விருத்தாசலத்திலுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் அனைத்து வழக்கறிஞா்கள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, வழக்குரைஞா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். தொடா்ந்து நடைபெற்ற கூட்டுக் குழுவின் போராட்டக்குழுக் கூட்டத்தில், குற்றவியல் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்ட 5 நபா் கொண்ட கமிட்டியை எதிா்ப்பதற்கு பிராந்திய குழு அமைக்கப்படும்பட்சத்தில் அதில் கூட்டுக்குழு உறுப்பினா்கள் இடம்பெறுதல், நீதிமன்ற அவமதிப்பு சட்டம், நீதித் துறை அலுவலா்கள் பாதுகாப்பு சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், 5 மாதங்களாகியும் வழக்குரைஞா்களுக்கு வழங்கப்படாத நிவாரண உதவியை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த நிகழ்வுகளில் வழக்குரைஞா்கள் அருள்குமாா், தனவேல், அசோக்குமாா், புஷ்பதேவன், அப்துல்லா, சிவசங்கா், தன்ராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...