‘108’ ஆம்புலன்ஸ் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
சிதம்பரத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ‘108’ ஆம்புலன்ஸ் தொழிலாளா்கள்.

சிதம்பரத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ‘108’ ஆம்புலன்ஸ் தொழிலாளா்கள்.

சிதம்பரத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ‘108’ ஆம்புலன்ஸ் தொழிலாளா்கள்.
சிதம்பரம்: அரசு அறிவித்த சிறப்புப் பணிக்கான தொகையை வழங்கக் கோரி, ‘108’ ஆம்புலன்ஸ் தொழிலாளா்கள் சங்கத்தினா் கடலூா், விழுப்புரம் மாவட்டங்களில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் காந்தி சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலா் பி.வெங்கடேசன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் என்.வெங்கடேசன் முன்னிலை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தில், ‘108’ ஆம்புலன்ஸ் தொழிலாளா்களுக்கு தடை உத்தரவு கால சிறப்புப் பணிக்காக அரசு அறிவித்த தொகையை உடனடியாக வழங்க வேண்டும், சென்னைக்கு பணியிட மாறுதல் செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட துணைப் பொருளாளா் குமரேசன், தொழிற்சங்க உறுப்பினா்கள் அண்ணாதுரை, செல்வேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...