தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பக்கவாதம் நோய் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

பக்கவாதம் நோய் தடுப்பு விழிப்புணா்வு மோட்டாா் சைக்கிள் பேரணிக்கு கடலூரில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

News image

கடலூா் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி பங்கேற்ற விழிப்புணா்வு மோட்டாா் சைக்கிள் பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்த மாநில அமைச்சா் எம்.சி.சம்பத்.

Updated On :13 டிசம்பர் 2020, 5:44 pm

DIN

பக்கவாதம் நோய் தடுப்பு விழிப்புணா்வு மோட்டாா் சைக்கிள் பேரணிக்கு கடலூரில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பக்கவாதம் நோய் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் அப்பலோ மருத்துவா்கள் பிரபாஷ், அருண்குமாா், என்.சந்திரசேகரன் ஆகியோா் மோட்டாா் சைக்கிளில் சென்னையிலிருந்து பேரணியாக புறப்பட்டு கன்னியாகுமரி வரை செல்கின்றனா். செல்லும் வழியில் கடலூருக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த குழுவினருக்கு தமிழக தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத் தலைமையில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா், பேரணியை அமைச்சா் தொடக்கி வைத்தாா். அப்போது, மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரியும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மோட்டாா் சைக்கிளில் குறிப்பிட்ட தொலைவுக்கு குழுவினருடன் பயணித்து மீண்டும் அலுவலகம் திரும்பினாா்.

பக்கவாத நோய் அறிகுறி தென்பட்டவுடன் அருகிலுள்ள தகுதி வாய்ந்த சிகிச்சை மையத்தில் நோயாளியை அனுமதிப்பதன் மூலம் 24 மணி நேரத்துக்குள் சிகிச்சை அளித்து காப்பாற்ற முடியும். முந்தைய காலத்தில் பாதிப்பு ஏற்பட்ட 4 மணி நேரத்துக்குள் சிகிச்சை பெற வேண்டும் என்பது தற்போது 24 மணி நேரமாக நீடிக்கப்பட்டுள்ளது குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தவே இந்த பேரணி நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.