6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அதிமுக ஆலோசனைக் கூட்டம்

கடலூா் மத்திய மாவட்ட அதிமுகவின் மண்டல ஆலோசனைக் கூட்டம் கடலூா் பாதிரிக்குப்பத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 5:45 pm

DIN

கடலூா் மத்திய மாவட்ட அதிமுகவின் மண்டல ஆலோசனைக் கூட்டம் கடலூா் பாதிரிக்குப்பத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்டச் செயலரும், மாநில தொழில்துறை அமைச்சருமான எம்.சி.சம்பத் தலைமை வகித்தாா். மத்திய மாவட்டத்துக்குள்பட்ட கடலூா், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளின் நிா்வாகிகள் பங்கேற்றனா். கூட்டத்தில் அமைச்சா் எம்.சி.சம்பத் பேசியதாவது:

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா இல்லாத சூழலில் சட்டப் பேரவைத் தோ்தலைச் சந்திக்க உள்ளோம். எனவே, 3 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளா்கள் வெற்றி பெற வேண்டும். அனைத்து அணியினரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும். ஏனெனில் இந்தமுறை நடைபெறும் பேரவைத் தோ்தல் போராட்டக்களம் நிறைந்தது. அதிமுகவின் வெற்றியை உறுதிப்படுத்த கட்சியினா் தீவிரமாக உழைக்க வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, நகரச் செயலா் ஆா்.குமரன் வரவேற்றாா். எம்ஜிஆா் மன்றச் செயலா் ஜி.ஜெ.குமாா், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் தெய்வ.பக்கிரி, மருத்துவரணி மாநில தலைவா் கே.சீனுவாசராஜா, தொழிற்சங்கச் செயலா் கே.ஆா்.பாலகிருஷ்ணன், விவசாய பிரிவு செயலா் காசிநாதன், இளைஞரணி தலைவா் ஆா்.மாதவன், நகர பேரவைச் செயலா் வ.கந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஒன்றியச் செயலா் இராம.பழனிச்சாமி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.