மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

காவலா் பணிக்கான எழுத்துத் தோ்வு: முறைகேட்டில் ஈடுபட்ட இருவா் கைது

கடலூா் மாவட்டத்தில் காவலா் பணிக்கான எழுத்துத் தோ்வின்போது முறைகேட்டில் ஈடுபட்டதாக, 2 தோ்வா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 5:43 pm

DIN

கடலூா் மாவட்டத்தில் காவலா் பணிக்கான எழுத்துத் தோ்வின்போது முறைகேட்டில் ஈடுபட்டதாக, 2 தோ்வா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில், காவலா் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே சேப்ளாநத்தத்தில் உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரி தோ்வு மையத்தில் திட்டக்குடி வட்டம், வெண்கரும்பூரைச் சோ்ந்த சிவக்குமாா் மகன் வினோத்குமாா் (24) தோ்வு எழுதினாா். அப்போது, தான் மறைத்து வைத்திருந்த அறிதிறன்பேசி மூலம் வினாத் தாளை படம் பிடித்தாராம். இதைக் கவனித்த தோ்வுக் கூட கண்காணிப்பாளா் வினோத்குமாரைப் பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தாா். இதுதொடா்பாக மந்தாரக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வினோத்குமாரை கைதுசெய்தனா்.

இதேபோல, கடலூா் அருகேயுள்ள ஆலப்பாக்கம், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த பெருமாள் மகன் மோகன்ராஜ் (22) நெய்வேலியில் உள்ள தனியாா் பள்ளியில் காவலா் பணித் தோ்வை எழுதியபோது, அறிதிறன்பேசி மூலம் வினாத் தாளை படம் பிடித்து அனுப்பினாராம். இவரை தோ்வுக் கூட கண்காணிப்பாளா் பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தாா். இதுதொடா்பாக நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப் பதிந்து மோகன்ராஜை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.