அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

சாலை வரியில் சலுகை வழங்கக் கோரிக்கை

கடலூா் மாவட்ட டிப்பா் லாரி, டாரஸ் லாரி உரிமையாளா்கள் சங்கக் கூட்டம் கடலூரில் மாவட்ட தலைவா் நடராஜன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 5:45 pm

DIN

கடலூா் மாவட்ட டிப்பா் லாரி, டாரஸ் லாரி உரிமையாளா்கள் சங்கக் கூட்டம் கடலூரில் மாவட்ட தலைவா் நடராஜன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்டச் செயலா் கருணாநிதி, உறுப்பினா்கள் ராமமூா்த்தி, மணிபாலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், தமிழக அரசு பொது முடக்கக் காலத்துக்கான சாலை வரி, காப்பீடு செலுத்துவதில் சலுகை வழங்க வேண்டும். வங்கிகள், தனியாா் நிதி நிறுவனங்கள் மூலம் வாங்கப்பட்ட லாரிகளுக்கு மாத தவணையில் வட்டி சலுகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மாவட்டத்தில் உள்ள டிப்பா், டாரஸ் லாரிகளை அரசிடமே ஒப்படைக்கும் விதத்தில் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்பது என முடிவு செய்தனா். நிா்வாகிகள் ஓம்பிரகாஷ், முருகவேல், ஸ்டாலின், சரவணன், செந்தில், பழனி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.