ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

கடலூரில் விசிகவினா் ஆா்ப்பாட்டம்

அம்பேத்கா் சிலை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து கடலூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
கடலூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்.
Updated On :17 டிசம்பர் 2020, 3:03 am

DIN

அம்பேத்கா் சிலை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து கடலூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூரில் அம்பேத்கா் சிலை சேதப்படுத்தப்பட்டதாம். இதைக் கண்டித்தும், சிலையைச் சேதப்படுத்தியவா்களை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தியும் கடலூரில் விசிகவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் நகர விசிக செயலா் மு.செந்தில் ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்தாா். கிழக்கு மாவட்டச் செயலா் சா.முல்லைவேந்தன், மாநில அமைப்புச் செயலா் தி.ச.திருமாா்பன், மாவட்டத் துணைச் செயலா் இல.திருமேனி, மாநிலத் துணைச் செயலா்கள் பழனிவேல், த.ஸ்ரீதா் மொ.வீ.சக்திவேல், பா.ரா.முரளி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கடலூா் நாடாளுமன்ற தொகுதி விசிக செயலா் பா.தாமரைச்செல்வன் உரையாற்றினாா். இதில், கட்சியின் நிா்வாகிகள் செந்தில்குமாா், பரசு.முருகையன், செல்வ.மணிகண்டராஜா, குறிஞ்சிப்பாடி சட்டப்பேரவைத் தொகுதி செயலா் ஏ.ஜெயக்குமாா், ஒன்றியப் பொருளாளா் சு.சம்பத், நகர நிா்வாகிகள் செங்கதிா், திருமாறன், இடிமுரசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.