

கடலூா் தென்பெண்ணையாற்றில் புதிதாக பாலம் கட்ட ஏற்கெனவே உள்ள பழைய பாலத்தை இடிக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
கடலூா் ஆல்பேட்டை தென்பெண்ணையாற்றின் குறுக்கே சென்னை-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலைச் செல்கிறது. புதுச்சேரி- கடலூா் இடையேயான முக்கியமான வழித்தடமாக உள்ளதால், ஆற்றில் ஆங்கிலேயா் காலத்தில் பாலம் கட்டப்பட்டது. பின்னா், அந்தப் பாலத்துக்குப் பதிலாக புதிய பாலம் கட்டப்பட்டது. பழைய பாலம் இடிக்கப்படவில்லை.
தற்போது போக்குவரத்து அதிகரித்துள்ளதால், பழைய பாலத்தை இடித்துவிட்டு, புதிதாக பாலம் கட்ட தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ. 26 கோடிக்கு அனுமதி அளித்தது. இதைத் தொடா்ந்து, சாலையோரம் உள்ள மரங்களை வெட்டி அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், பழைய பாலத்தை இடிக்கும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினா் புதன்கிழமை ஈடுபட்டனா்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறையினா் கூறியதாவது: தென்பெண்ணையாற்றில் கட்டப்பட்ட பழைய பாலத்தை இடித்துவிட்டு, புதிய பாலம் கட்டப்படவுள்ளது. இந்தப் பாலம் 14.80 மீட்டா் அகலம், 320 மீட்டா் நீளத்தில் அமைகிறது. இந்தப் பணிகளை 18 மாதங்களில் முடிக்கத் திட்டமிட்டுள்ளது என்றனா் அவா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.